ஆற்றில் தீப்பற்றி எரிந்த ('ரிவர் டாக்சி') படகு

ஆற்றில் தீப்பற்றி எரிந்த ('ரிவர் டாக்சி') படகு

1 mins read
12ebd9a5-f7a9-4423-b9ae-10333a1b4a03
-

மரினா பேயில் எஸ்பிளனேட் அருகே சிங்கப்பூர் ஆற்றில் சென்றுகொண்டு இருந்த 'ரிவர் டாக்சி' எனப்படும் சிறிய படகு ஒன்று நேற்று மாலை தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென்று உயரே கிளம்பி எரிந்ததாகவும் அதன் விளைவாகக் கரும்புகை அதிக மாகக் காணப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர் கள் 'ஃபேஸ்புக்' வாயிலாகத் தெரிவித்தனர்.

ஆற்று நீரில் மிதந்த படகு தீப்பற்றி எரிவதை ஏராளமானோர் கூடி நின்று பார்த்ததாகவும் அவர்கள் கூறினர். இந்தத் தீ கிட்டத் தட்ட 15 நிமிடங்கள் எரிந்ததாக ரைஸ் லாரன்ஸ் என்னும் ஃபேஸ் புக் பயனாளர் ஒருவர் குறிப்பிட் டார். தீப்பிடித்த உடனேயே படகில் இருந்தவர் ஆற்றுக்குள் குதித்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' வாசகர் ஒருவர் கூறி னார்.

தீப்பிடித்து மளமளவென்று எரிந்த நிலையில் காணப்பட்ட சிறிய படகு. படம்: ஃபேஸ்புக்