அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்கட்சித் தலைவர் ஜெயலலிதா.
அதேநேரத்தில் எத்தனைமிரட்டல் வந்தாலும் எம்.பி. பதவியிலிருந்து விலக முடியாது என்றுமேலவையில் சசிகலா புஷ்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.சனிக்கிழமை பகல் டெல்லிவிமான நிலையத்தில் திமுகஎம்.பி. திருச்சி சிவாவை அதிமுகநாடாளுமன்ற உறுப்பினர் சசிகலாபுஷ்பா கன்னத்தில் அறைந்துள்ளார்.
ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்ததால் திருச்சிசிவாவை தாக்கியதாக சசிகலாபுஷ்பா விளக்கம் அளித்தார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியது.அதையடுத்து முதல்வர் ஜெயலலிதா சசிகலா புஷ்பாவையும்மக்களவை துணை சபாநாயகர்தம்பித்துரையையும் விசாரணைசெய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிமுகஅடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே நேற்று மேலவையில் திடீரென பேசிய சசிகலாபுஷ்பா, ஜெயலலிதா தம்மைஅறைந்ததாகவும் நாடாளுமன்றஉறுப்பினர் பதவியில் இருந்துபதவி விலக்கியதாகவும் புகார்கூறினார்.அத்துடன் தமது அரசியல்சாசன எம்.பி. பதவியில் இருந்துவிலக வேண்டும் என்று ஜெயலலிதா நிர்பந்திக்கிறார்; மிரட்டுகிறார்கள்; சித்ரவதை செய்கின்றனர்;எத்தனை மிரட்டல் வந்தாலும் ஒருபோதும் எம்.பி பதவியில் இருந்துவிலகவே மாட்டேன்.
நான்எம்.பி.யாகவே நீடிப்பேன் என்றார்.இதற்கு அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கடும் எதிர்ப்புத்தெரிவித்தார். அவரை பேசவிடாமல் மேலவை துணைத் தலைவர்குரியன் அமரச் செய்தார்.ஆனால் காங்கிரசு கட்சியின்குலாம்நபி ஆசாத் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.சசிகலா புஷ்பாவை தொடர்ந்துபேச அனுமதிக்க வேண்டும்என்றும் குலாம்நபி ஆசாத்வலியுறுத்தினார்.தொடக்கத்தில் ஆவேசமாகபேசினார் சசிகலா புஷ்பா. இந்தநாட்டில் பெண் எம்பிக்களுக்குஎங்கே பாதுகாப்பு இருக்கிறது,எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கு அரசு பாதுகாப்புத்தர வேண்டும் என்று முழங்கியவர்கடைசியில் கண்ணீர்விட்டுக்கதறி பேச்சை முடித்தார்.அதிமுக பொதுச் செயலாளரும்முதல்வருமான ஜெயலலிதாவின்மீது ஒரு தாக்குதல் புகார்வந்துள்ளது, அதிமுகவினரைஅதிர வைத்துள்ளதுடன் தேசியஅளவிலும் இச்சம்பவம்பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளது.இதுவரை ஜெயலலிதா அடித்ததாக யாருமே புகார் கூறியதில்லை.ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்து பின்னர், திமுகவுக்கோ பிற கட்சிகளுக்கோபோனவர்கள்கூட ஜெயலலிதாமீது இப்படி ஒரு புகாரைக் கூறியதில்லை.ஆனால் அதிமுகவினரேஆடிப்போகும் அளவுக்கு, என்னைஜெயலலிதா அடித்தார், எப்படிஎன்னை அடிக்கலாம் என்றுகேட்டு அதிர வைத்துவிட்டார்தூத்துக்குடி சசிகலா புஷ்பா.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்றோர்தான் ஜெயலலிதா மீது புகார் கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதாவுக்குவலது கரமாக இருந்தவர்கள். ஆனால், ஜெயலலிதாவால்உருவாக்கப்பட்டு உயர் பதவியைப்பெற்ற சசிகலா புஷ்பா அதிரடியாகமேலவையில் அவர் மீதே புகார்கூறியது எவரும் எதிர்பார்க்காதது.தூத்துக்குடி மாவட்டம், முதலூரை அடுத்த அடையல்கிராமத்தைச் சேர்ந்த சசிகலாபுஷ்பா, குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி கண்டவர்.தூத்துக்குடி மாவட்ட அதிமுகமகளிர் அணிச் செயளாலர், தூத்துக்குடி நகர மேயர், மாநிலங்களவை உறுப்பினர் எனக் கட்சிக்குள் இவரின் வளர்ச்சி வேகமாகஇருந்து வந்தது.இவர் தூத்துக்குடி மேயராகபதவி வகித்த போதே மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனால் மேயர் பதவியைபதவி விலகல் செய்து எம்.பி ஆனார்.மேலும் அதிமுகவின் மேலவைகொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார் சசிகலா புஷ்பா.வேகமாக வளர்ச்சிகண்டபோதிலும் தொடர்ந்து பலசர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளஇவர், இப்போது கட்சிக்கும்ஜெயலலிதாவுக்கும் சவால் விடும்வகையில் செயல்பட்டுள்ளார்.இந்த நிலையில், நெல்லைமாவட்டத்திலுள்ள அவரது வீடுமர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சசிகலா புஷ்பாடெல்லியில் வசிக்கும் இல்லத்திலும் சென்னை வீட்டிலும் கூடுதல்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

