இரு நாடுகளையும் சேர்ந்த நிறு வனங்கள் மூன்றாம் தரப்பு சந் தைகளிலுள்ள தொழில் வாய்ப்பு களைச் சேர்ந்து பயன்படுத்திக் கொள்ள உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூரும் அமெ ரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. திங்கட்கிழமையன்று (சிங்கப் பூர் நேரப்படி நேற்றுக் காலை) வாஷிங்டனில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் இரு நாடுகளும் ஒன்று மற்றதன் பலங்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சிங்கப்பூர்-=அமெ ரிக்க ஒத்துழைப்புத் திட்டம் தொடங்கப்படுகிறது.
அமெரிக்க நிறுவனங்கள் தென்கிழக்காசியாவுக்கான நுழை வாயிலாகச் சிங்கப்பூரைப் பயன் படுத்திக் கொள்ளமுடியும். சிங்கப் பூர் நிறுவனங்கள் அமெரிக்கக் கட்டமைப்புகளையும் அமெரிக்கா வின் புதிய தொழில்நுட்பங்களை யும் பயன்படுத்திக்கொள்ள முடி யும். அண்மையில் 'கூகலின்' ஆய் வுக்கூடமான 'கூகல் X'ல் இருந்து கிளையாகப் பிரிந்த சான் பிரான் சிஸ்கோ மென்பொருள் நிறுவன மான 'ஃபிளக்ஸ் ஃபெக்டரி'யில் US$9.25 மில்லியன் (S$12.4 மில்லியன்) முதலீடு செய்தது சுர்பானா ஜூரோங் நிறுவனம்.
புதிய ஒப்பந்தத்தின்கீழ் ஆதரவ ளிக்கப்படவிருக்கும் தொழில் திட் டங்களுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு. வர்த்தகத் தொழில் அமைச்சின் துணைச் செயலாளர் (வர்த்தகம்) திரு லியூக் கோவும் அமெரிக்க வெளிநாட்டு வர்த்தகச் சேவையின் தலைமை இயக்குநரும் அமெரிக்க வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைப் பிரிவின் உதவிச் செய லாளருமான திரு அருண் குமாரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டனர். பிரதமர் லீ சியன் லூங் வாஷிங் டனுக்கு மேற்கொண்டிருக்கும் அதிகாரபூர்வ வருகையின் ஒரு பகுதியாக ஒப்பந்தம் கையெழுத் தானது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமலாக்கும் சிங்கப்பூர் அனைத் துலகத் தொழில் நடவடிக்கை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு லீ ஆர்க் பூன், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக் கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத் திக் கொடுக்கும் என்று கூறினார்.
சிங்கப்பூர் வர்த்தக தொழில் அமைச்சின் (வர்த்தகம்) துணைச் செயலாளர் திரு லியுக் கோவும் (இடது) அமெரிக்கா மற்றும் வெளி நாட்டு வர்த்தகச் சேவையின் தலைமைச் செயலாளரும் உலகளாவிய சந்தைப் பிரிவின் உதவிச் செயலாளருமான திரு அருண் குமாரும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்ட பிறகு கைக்குலுக்கிக் கொள்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

