தோ பாயோ உணவு அங்காடி நிலையத்தை துப்பாக்கிக்காரர்கள் தாக்குவதுபோலவும் அந்தத் தாக் குதலை முறியடிப்பது எவ்வாறு என்றும் பாவனைப் பயிற்சி மூலம் பொதுமக்களுக்கு விளக்கப்பட் டது. கைத்துப்பாக்கியுடன் நுழையும் இரு பயங்கரவாதிகள் தோ பா யோ லோரோங் 1ல் உள்ள அந்த நிலையத்தினுள் புகுந்து பொது மக்களை நோக்கி சரமாரியாகச் சுடுகிறார்கள். அந்தத் திடீர் தாக்குதலில் நால்வர் மரண மடைந்ததோடு ஒருவர் காயமடை கிறார். நிலைமை மோசமாகி மேலும் பல உயிர்கள் பறிபோகும் முன்னதாக விரைந்து வந்த போலி சார் அந்த பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்கிறார்கள். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிசெய்ய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விரைந்து செயலாற்றுகிறது.
தோ பாயோ வெஸ்ட்=பாலஸ் டியர் தொகுதி ஏற்பாடு செய்த பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சி யின் ஒரு பகுதி இது. அவசரகால தயார்நிலை தினத்தை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட இப்பயிற் சியைக் காண ஆயிரக்கணக் கானவர்கள் வந்திருந்ததாகவும் பயங்கரவாதத் தாக்குதல் நில வரத்தில் உயிர்காக்கும் திறன் களை அவர்கள் கற்றுக்கொண்ட தாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 'SGSecure' என்னும் தேசிய பயங்கரவாத முறியடிப்பு இயக்கத் தின் தொடர்பில் தோ பாயோ வெஸ்ட்- பாலஸ்டியர் தொகுதி கடந்த மார்ச் மாதம் முதல் அவசர கால தயார்நிலைப் பயிற்சிகளை அளித்து வருகிறது. அத்தொகு தியைச் சேர்ந்த 1,200 குடியிருப்பாளர்கள் இதுவரை அப்பயிற்சி களில் பங்கேற்று திறன்களைக் கற்றுக்கொண்டதாகத் தெரிவிக் கப்பட்டது.
பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் மரணமடைந்தது போலவும் தாக்குதல் நடத்தியவர்களை போலிசார் சுட்டுக்கொல்வது போலவும் பயிற்சி நடத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

