தேசிய தினச் செய்தி: சிங்கப்பூரர்கள் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க பிரதமர் லீ வலியுறுத்து

தேசிய தினச் செய்தி: சிங்கப்பூரர்கள் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க பிரதமர் லீ வலியுறுத்து

2 mins read
9a802604-0447-4fb7-859f-3a330ebc8534
-

தடைகளை மீறி வெற்றி கண்டு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளபோதிலும் மேலும் பல புதிய சவால்களை சிங்கப்பூர் எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சஃப்ரா பொங்கோல் கிளப் ஹவுசில் இருந்தபடி தேசிய தின உரையாற்றிய பிரதமர் லீ, "வெவ்வேறு இனத்தாரும் சமயத்தாரும் நல்லிணக்கத்துடன் ஒற்று மையாக வாழ்ந்து வருகின்றனர். பொது வான இடங்களைப் பகிர்ந்துகொண்டு ஒருவர் மற்றவரின் கொண்டாட்டத்திலும் பங்கெடுக்கிறோம். "ஜனவரியில் என் இந்திய நண்பர் களுடன் சேர்ந்து பொங்கல் கொண் டாடுகிறேன். சீனப் புத்தாண்டின்போது சீனர் அல்லாத மற்ற நண்பர்களுக்கு ஆரஞ்சுப் பழங்களைத் தருகிறேன். அதுபோல, நோன்புப் பெருநாளின்போது பல நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். "இந்த நல்லிணக்கம் அரிதானது, மதிப்புமிக்கது. இதை உருவாக்க எவ்வளவு துணிவும் கடின உழைப்பும் தேவைப் பட்டதோ, அதுபோலவே இந்த மகத்துவத் தைத் தொடர்ந்து கட்டிக்காக்கவும் பெருமுயற்சி தேவை," என்றார்.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நாட்டை நிர்மாணிக்கும் பணியைத் தொடங்கிய போது, 'ஒரே மக்கள்' என்று நம்மால் கூறிக்கொள்ள முடியவில்லை. உயிர் வாழ்வதைப் பற்றி நினைப்பதே கடினமாக இருந்த சூழ்நிலையிலும் தடைகளை மீறி வெற்றி கண்டதாகத் திரு லீ குறிப்பிட்டார். நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ள போதும் புதிய சவால்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவற்றுள் மூன்று முக்கிய சவால்களை அவர் பட்டியலிட்டார். "முதலாவதாக, தீவிரப் போக்குடைய பயங்கரவாதம் நமது சமுதாயத்தை சீர்குலைத்துவிடலாம். அண்மையில் ஐஎஸ் அமைப்பின் தூண்டுதலால் அமெ ரிக்கா, ஐரோப்பா, துருக்கி, பங்ளாதேஷ், நமக்கு அருகில் உள்ள மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் பயங் கரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர். இன்னும் நடத்தலாம். சிங்கப்பூருக்கும் குறிவைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். சுயதீவிரவாதச் சிந்த னைகளை வளர்த்துக்கொண்ட சிங்கப் பூரர்களையும் வெளிநாட்டு ஊழியர்களை யும் தடுத்து வைத்திருக்கிறோம். இங்கும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் நாம் ஒற்றுமையுடன் அதை எதிர்கொள்ள வேண்டும்" என்று பிரதமர் கூறினார்.