ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த ஸ்கூலிங்

ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த ஸ்கூலிங்

1 mins read
55c83597-8c1b-47b1-9f65-2cb8b0ef970e
-

ரியோ டி ஜெனிரோ: எதேச்சை­பாணி நீச்­ச­லில் உலகின் தலை­ சி­றந்த வீரர்­களு­டன் களத்­தில் குதித்த சிங்கப்­பூ­ரின் ஜோசஃப் ஸ்கூலிங் சிங்கப்­பூர் விளை­யாட்டு வர­லாற்­றில் தடம் பதிக்­கும் வாய்ப்பைத் தவறவிட்­டி­ருக்­கிறார். நேற்று காலை சுமார் 9 மணி­ய­ள­வில் 100 மீட்டர் எதேச்சை­பாணி நீச்­ச­லின் இரண்டா­வது அரை­யி­று­திச் சுற்றில் 21 வயது ஸ்கூ­லிங்கால் எட்­டா­வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இரண்டு அரை­யி­று­தி­களி­லும் போட்­டி­யிட்ட 16 வீரர்­களில் அவர் கடை­சி­யாக போட்டியை முடித்­தார். அதற்கு அவர் எடுத்­துக்­கொண்ட நேரம் 48.7 விநா­டி­கள்.

இறுதிச் சுற்­றுக்கு ஸ்கூலிங் தகு­தி­பெ­றத் தவ­றி­யது சிங்கப்­பூ­ரர்­களுக்கு ஏமாற்­றத்தைத் தந்த­ தென்றால், அப்­போட்­டி­யில் உலக வெற்­றி­யா­ள­ரான சீனாவின் நிங் ஸெடாவும் இறுதிச் சுற்­றுக்கு முன்னேற முடி­யா­மல் போனது பல­ருக்­கும் அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக இருந்தது. ஒலிம்­பிக் வர­லாற்­றில் நீச்சல் போட்­டி­களில் இறுதிச் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­றும் முதல் சிங்கப்­பூர் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவதே ஸ்கூ­லிங்­கின் இலக்­காக இருந்தது. இதற்­கு­முன், ஒலிம்­பிக் நீச்சல் போட்­டி­களில் இறுதிச் சுற்­றுக்­குத் தகு­தி­பெற்ற முதல் சிங்கப்­பூர் பெண் என்ற பெருமையை 2008ஆம் ஆண்டு வண்­ணத்­துப்­பூச்சி பாணி நீச்சல் போட்­டி­யில் தௌ லி பெற்­றி­ருந்தார். சீனாவில் நடை­பெற்ற போட்­டி­களில் அவர் ஐந்தா­வ­தாக வந்தார்.

ஒலிம்­பிக் வர­லாற்­றில் நீச்சல் போட்­டி­களில் இறுதிச் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­றும் முதல் சிங்கப்­பூர் ஆடவர் என்ற பெருமையைப் பெறும் இலக்கைத் தவறவிட்ட வருத்தத்தில் ஸ்கூ­லிங். படம்: ராய்ட்டர்ஸ்