புதிய உருமாற்றத்திற்கு பேருந்து நிறுவனங்களுடன் அரசாங்கம் ஒப்பந்தம்

புதிய உருமாற்றத்திற்கு பேருந்து நிறுவனங்களுடன் அரசாங்கம் ஒப்பந்தம்

1 mins read
8cd32c95-94e5-4641-b346-31a3f59e5933
-

சிங்கப்பூரின் பொதுப் பேருந்துத் துறையை புதிய அர சாங்கப் பேருந்து ஒப்பந்தக் குத்தகை என்று உருமாற்றம் செய்வ தற்கான ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தானதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் தெரிவித்துள் ளது. எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி பேருந்துகள் இந்தப் புதிய அரசாங்கப் பேருந்து மாதிரி குத்தகை திட்டத்திற்கு மாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் இது. இதற்காகும் குத்தகைக் கட் டணம் ஏழு பில்லியன் வெள்ளி என மதிப்பிடப்படுகிறது.

எஸ்பி எஸ் டிரான்சிட் பேருந்துகளுக் குரியது $5.3 பில்லியன் எனவும் எஸ்எம்ஆர்டி நிறுவனப் பேருந்து களுக்கானது $1.9 பில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகைத் தொகை இந்த இரு பேருந்து நிறுவனங்களுடனும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. உருமாற்றம் 11 பேருந்து தொகுப்புகளுடன், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடப் புக்கு வரவிருப்பதாகவும் ஆணை யம் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் குறிப்பிட்டது.