தாய்லாந்தின் பல நகர்களில் குண்டுவெடிப்பு: நால்வர் பலி

தாய்லாந்தின் பல நகர்களில் குண்டுவெடிப்பு: நால்வர் பலி

2 mins read
1b9a5f75-f7e5-407f-9ddd-4f0e11e9a935
-

தாய்லாந்தின் பல்வேறு நகரங் களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் நால்வர் மாண்டனர். பலர் காயமுற்றனர். இருபது பேரை பலிகொண்ட எரவான் வழிபாட்டுத்தல குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு முடிவதற்குள் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப் பட்டுள்ளன. தலைநகர் பேங்காக்கின் தெற்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள புகழ்பெற்ற பொழுதுபோக்கு நகரான ஹுவா ஹின்னில் 24 மணி நேரத்தில் நான்கு குண்டுகள் வெடித்தன. வியாழக்கிழமை இரவு இரு குண்டுவெடிப்புகளில் சிக்கி மாது ஒருவர் மாண்டார்.

19 வெளி நாட்டவர் உள்ளிட்ட 20 பேர் படு காயமுற்றனர். அந்தப் பதற்றம் தணிவதற் குள் நேற்றுக் காலை அந்நகரில் மேலும் இரு குண்டுகள் வெடித் ததில் ஒருவர் மாண்டார். அதேபோல சுராட் தானி என் னும் தென் மாநிலத்தில் இரு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். அங்குள்ள காவல் நிலையங்களின் முன்னால் அரைமணி நேர இடைவெளியில் அந்தக் குண்டுகள் வெடித்தன. புக்கெட் தீவில் உள்ள கடற் கரை ஓய்வு நகரான பாத்தோங் கில் நேற்று இரு குண்டுகள் வெடித்தன. அதேவேளை டிராங் என்னும் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் மாண்டார். கடற்கரை மாநிலமான ஃபாங் இங்காவில் நேற்றுக் காலை மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. இருப்பினும் அச்சம்ப வங்களில் யாருக்கும் காய மில்லை என்று போலிஸ் தெரி வித்தது.

வியாழன் பின்னிரவிலும் நேற்று அதிகாலையிலும் மொத் தம் 11 இடங்களில் குண்டு வெடித்ததாகவும் அது குறிப்பிட் டது. "இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை. உள்ளூர் பிரிவினைவாதி களின் சதிச்செயல்கள் இவை," என்று தேசிய போலிஸ் படையின் துணைப் பேச்சாளர் பியாபன் பிங்முவாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இருப்பினும் உள் ளூரில் எந்தக் குழு தாக்குதலை நடத்தியது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என் றார் அவர்.

குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்