சிங்கப்பூரின் ஒலிம்பிக் நாயகன் ஜோசஃப் ஸ்கூலிங் நேற்று நாடா ளுமன்றத்தில் கௌரவிக்கப்பட் டார். அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஸ்கூலிங்கைப் பாராட்டிய அரிய தொரு நிகழ்வு அரங்கேறியது. பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் ஸ்கூலிங் தமது பெற்றோருடன் நாடாளு மன்றத்திற்கு வந்து பாராட்டு களை ஏற்றுக்கொண்டார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவருமான டான் சுவான் ஜின் பாராட்டுத் தீர்மானத்தைக் கொண்டு வந் தார். அப்போது அவர் பேசுகை யில், "ஜோசஃப் ஸ்கூலிங்கின் தங்கப் பதக்கம் சிங்கப்பூரின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல் கல். ஒரு புதிய தொடக்கம் இது. "இந்த வெற்றியை அடிப்படை யாகக் கொண்டு நமது விளை யாட்டு கலாசாரத்தைப் பலப் படுத்த வேண்டும். அதன் மூலம் சிங்கப்பூர் விளையாட்டு வேட்கை கொண்ட ஒரு தேசம் என்பதை உருவாக்க வேண்டும்.
"வீழ்ச்சியைப் பற்றி ஒரு போதும் சிந்திக்காத சிங்கப்பூரின் மனப்போக்கை இந்த ஒலிம்பிக் சாதனை பிரதிபலிக்கிறது. தடை களைக் கடந்து வெற்றிபெறவும் அந்த வெற்றியைக் கட்டிக்காக் கவும் நாம் உறுதி ஏற்கவேண் டும்," என்றார் திரு டான். ஸ்கூலிங் வெற்றிக்கு உறு துணையாக இருந்த அவரது தந்தை திரு கோலின் ஸ்கூலிங், தாயார் திருவாட்டி மே ஸ்கூலிங் ஆகியோரின் முயற்சிகளையும் ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை ஸ்கூலிங்கிடம் விதைத்த அவரது தாத்தாவும் சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் வீர ருமான லாயிட் வல்பெர்க் பற்றி யும் அமைச்சர் டான் குறிப்பிட்டுப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் லீயுடனும் மன்ற உறுப்பினர்களுடனும் 'செல்ஃபி' எடுத்து மகிழும் ஜோசஃப் ஸ்கூலிங். பிரதமருக்கு அருகில் ஸ்கூலிங்கின் பெற்றோர். படம்: சாவ்பாவ்

