இல்லத்தில் மொழி ஒலித்தால் உள்ளத்தில் மொழி வளரும்

இல்லத்தில் மொழி ஒலித்தால் உள்ளத்தில் மொழி வளரும்

2 mins read
dba3aac5-3748-465a-a400-15bd7dc9ecb7
-

முஹம்மது ஃபைரோஸ்

தாய்மொழி கற்றல் நமது பிள் ளைகளை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஈடுபடுத் துகிறது. அதன் அடிப்படையில், சமூக ஆதரவிலான அணுகு முறையின்வழி அடுத்தடுத்த தலைமுறையினரை இருமொழி, இருகலாசாரத் திறன் உடையவர் களாக எதிர்காலத்துக்குத் தயார் படுத்த முடியும் என்று கல்வி அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங் தெரி வித்துள்ளார். சிங்கப்பூர் பள்ளிகளும் ஆசிரி யர்களும் தாய்மொழி கற்பித்த லோடு நிறுத்திவிடுவதில்லை. மாணவர்களின் தேசிய, கலாசார அடையாளங்களை வலுப்படுத்த அவர்கள் முக்கிய கலாசார விழுமியங்களை விதைப்பதாகவும் அவர் கூறினார்.

சன்டெக் மாநாட்டு, கண் காட்சி மையத்தில் நேற்று நடை பெற்ற ஐந்தாவது தாய்மொழி களின் கருத்தரங்கில் உரை யாற்றியபோது இதனைத் தெரி வித்த திருவாட்டி லோ, மொழி களின் கற்றல் வகுப்பறையுடன் நின்றுவிடாமல் வீட்டிலும் சமூகத் திலும் விரிவுப்படுத்தப்பட வேண் டும் என்று வலியுறுத்தினார். "தாய்மொழி மீது ஆர்வத்தைத் தூண்டி அதனைப் பேணி வளர்க்க பெற்றோர்களுக்கும் இன்றியமை யாத பங்கு உண்டு. இதைச் செய்ய அவர்கள் வீட்டில் உகந்த சூழலை அமைக்க ஆதரவு அளிக் கலாம்," என்றார் அவர். அத்துடன், தாய்மொழி வளர்ச் சிக்குப் பங்களிக்க பள்ளிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த சமூக மும் முன்வருமாறு வேண்டுகோள் விடுத்த திருவாட்டி லோ, சீனம், மலாய், தமிழ் ஆகிய மூன்று தாய்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுக்களும் பெரும் ஆதரவாக விளங்கி மாணவர்களின் மாறு பட்ட தேவைகளுக்கு ஏற்றாற்போல பல திட்டங்கள் வகுத்ததை நினைவுபடுத்தினார்.

தமிழில் பேச ஊக்குவிப்பு

நாடகம், இருவழிக் கதை சொல்லுதல், பாடல் போன்ற பலதரப்பட்ட அம்சங்களின் மூலம் பிள்ளைகள் தமிழில் பேச தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழு ஊக்குவிக்கிறது. இதன்வழி தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் போன்றவற்றில் பிள்ளைகளிடம் ஆர்வத்தை உருவாக்க முடிவதாக அவர் கருத்துரைத்தார்.