தமிழ் ஒலிக்க உணர்வுபூர்வ பிரியாவிடை

1 mins read
11c03d07-c510-41de-8c45-0524a78178c9
-

'தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு' எனும் தமிழ்த் திரைப்பாடலுடன் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிபர், பிரதமர், அமைச்சர்கள், பிரமுகர்கள் என ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கூடியிருந்த பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் திரு நாதனுக்குப் பிடித்தமான 'பொற்காலம்' திரைப்படப் பாடல் முழுமையாக ஒலித்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண், தண்ணீர் ஆகியவற்றைச் சேகரித்து பொம்மை செய்வதாக இயற்றப் பட்டிருக்கும் அந்தப் பாடலைப் போல பல்வேறு இனங்களும் பாரம்பரியங்களும் ஒன்றிணைந்து இன்று நாம் காணும் சிங்கப்பூர் இருப்பதாக திரு நாதன் உருவகப்படுத்திப் பார்த்தார் என்று கூறி, அப்பாடலை அறிமுகம் செய்தார் அரசாங் கச் சேவைத் தலைவரும் இறுதிச்சடங்கை வழிநடத்தியவருமான பீட்டர் ஓங். அதைத் தொடர்ந்து, பிரதமர் லீ சியன் லூங் உட்பட எழுவர் திரு நாதனுக்குப் புகழுரை வாசித்தனர். தமது புகழுரையில், திரு நாதன் ஒவ்வொரு முறையும் தன்னைவிட நாட் டிற்கே முன்னுரிமை அளித்ததாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

"சிங்கப்பூரின் ஆகக் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்ந்த முன்னோடித் தலைமுறையினரில் ஒருவர் என்ற முறை யில் நம் நாட்டின் வரலாற்றை நிர்ணயித்த பல முக்கிய நிகழ்வுகளை நேரில் கண்டவர் திரு நாதன். பல வேளைகளில் அவற்றில் கலந்துகொள்ளவும் செய்தார். நாட்டு நிர்மாணத்தில் மதிப்பும் செல்வாக் கும் மிக்க வகையில் அவர் பங்காற்றி னார்," என்று பிரதமர் லீ கூறினார்.