சிம்ஸ் டிரைவில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் பணியாற் றும் 39 ஊழியர்களுக்கு 'ஸிக்கா' கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து பணியிடங்களில் அதி காரிகள் சோதனைகளை முடுக்கி விட்டுள்ளனர். 'சிம்ஸ் அர்பன் ஒயசிஸ் கொண்டோமினியம்' என்ற அந்தக் கட்டுமானத் தளத்தில் 'ஸிக்கா' தொற்று கண்டறியப்பட் டதை அடுத்து, அங்கும் ஊழியர் தங்குமிடத்திலும் கொசுக்களைப் பிடிக்கவல்ல 500 பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்குள்ள ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு இருமுறை தங்களது உடல் வெப்பநிலையைச் சோதித் துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள் ளது.
அத்துடன், கொசு விரட்டி, கொசு விரட்டி வில்லைகள், பேரகிட்டோ நீண்டநேர வில்லை கள் என மூன்றடுக்குப் பாது காப்பும் அங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உள்ளே புகாமல் தடுப்பதற்காக ஊழியர் தங்குமிடத்தில் உள்ள சன்னல்களில் வலைகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒவ்வோர் ஊழியருக்கும் கொசு விரட்டித் திரவம் தரப்பட்டு, மணிக்கு ஒருமுறை அதை உடலில் பூசிக்கொள்ளுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அன்றாடம் வைட்டமின் 'சி' மாத்திரைகளும் அவர்களுக்குத் தரப்படுகின்றன. 60, சிம்ஸ் டிரைவில் அமைந் துள்ள அந்தக் கட்டுமானத் தளத்திற்குச் சென்ற மனிதவள துணை அமைச்சர் டியோ செர் லக் இந்தத் தடுப்பு நடவடிக் கைகளைப் பார்வையிட்டார்.
"கூடுதல் தடுப்பு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 'ஸிக்கா' கிருமித்தொற்றின் தீவிரத்தை ஒவ்வோர் ஊழியரும் அறிந்திருப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் டியோ. "எல்லா கட்டுமான நிறுவனங் களும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக வலுப்படுத்தி, 'ஸிக்கா' கிருமித்தொற்று தொடர் பில் அங்கு பணியாற்றும் ஊழியர் களுக்கும் சமூகத்திற்கும் உறுதி அளிக்க வேண்டும். அறிகுறிகள் லேசாக இருந்தாலும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது," என்றும் திரு டியோ சொன்னார்.
'சிம்ஸ் அர்பன் ஒயசிஸ் கொண்டோமினிய' கட்டுமானத் தளத்திற்கு நேற்று நேரில் சென்று 'ஸிக்கா' தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டும் கேட்டும் அறிந்தார் மனிதவள துணை அமைச்சர் டியோ செர் லக். அங்குள்ள ஊழியர் தங்குவிடுதியில் பொருத்தப்பட்டுள்ள கொசுப் பொறியை அவருக்குக் காட்டுகிறார் அதிகாரி ஒருவர்.

