வில்சன் சைலஸ்
மாணவர்களின் முன்னேற்த்திற் காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் தமிழாசிரியர்களைக் கௌரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது தமிழ் முரசு. கல்வி அமைச்சு, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் 14வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. உயர்நிலை, தொடக்கநிலை, சிறந்த பயிற்சி ஆசிரியர், வாழ்நாள் சாதனை என நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் திரு பூபதி தியாகராஜன், திரு ஜெயகுமாரன் வேலாயுதம், திரு மு.அ.மசூது ஆகியோருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதும் திரு ம.சதீஸ்வரன், திரு ராமசாமி ஸ்டாலின் ஆகியோருக்கு சிறந்த பயிற்சி ஆசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டன. பார்ட்லி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திரு லூயிஸ் ஐசக் குமார், யங்செங் தொடக்கப்பள்ளி யைச் சேர்ந்த திருமதி கமலாதேவி செல்லையா இவ்வாண்டுக்கான முதல் பரிசு வென்ற தமிழாசிரி யர்கள். தொடக்கநிலை, உயர்நிலை பிரிவுகளில் இவ்வாண்டு முதல் இரு பரிசுகளை முறையே யங்செங் தொடக்கப்பள்ளியும் பார்ட்லி உயர் நிலைப்பள்ளியும் வென்றன.
ஒவ்வொரு பிரிவின் வெற்றி யாளர்களுக்கு விருதுகளுடன் $1,000 ரொக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக $500 ரொக் கமும் மூன்றாம் பரிசாக $250 ரொக்கமும் அளிக்கப்பட்டன. வெற்றி பெற்ற ஆசிரியர்களின் பள்ளிகளுக்கும் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
உயர்நிலைப் பிரிவில் 'தமிழ் முரசு நல்லாசிரியர் விருது' வென்ற உவகை உள்ளத்தில் நிறைந்திருக்க, செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயரும் (நடுவில்) தமது கல்விப் பணியைப் பாராட்டி, தோளோடு தோள் அணைத்து வாழ்த்த மகிழ்ச்சியில் திளைத்தார் பார்ட்லி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் லூயிஸ் ஐசக் குமார். உடன் தங்களுக்குத் தமிழமுதம் புகட்டி வரும் ஆசானுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் அப்பள்ளி மாணவர்கள். படம்: திமத்தி டேவிட்

