ஸிக்கா நோயாளியைத் தடுத்து வைக்கும் முறை மறுபரிசீலனை

ஸிக்கா நோயாளியைத் தடுத்து வைக்கும் முறை மறுபரிசீலனை

2 mins read
f0bdaf95-4323-4f46-a207-81e7a4750da7
-

ஸிக்கா கிருமி பாதிக்கும் ஆபத் துள்ள நோயாளிகளைத் தடுத்து வைக்கும் நடைமுறையைச் சுகாதார அமைச்சு மறுபரிசீலனை செய்வதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்துள்ளார். ஸிக்கா கிருமி தொற்றி இருப் பதாகச் சந்தேகிக்கப்படுவோர் இப்போது தொற்றுநோய் நிலையத் தில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். மருத்துவப் பரிசோதனை முடிவு வரும்வரை அங்கு அவர்கள் காத் திருப்பர். ஸிக்கா கிருமி தொற்றியிருக்கும் நோயாளிகள் மருத்துவமனைகளில் இப்போது தடுத்து வைக்கப்பட்டிருக் கிறார்கள். ஸிக்கா கிருமி தொற்றி யிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளை அவர்களின் ரத்தம், சிறுநீர் பரிசோதனை முடியும் வரை வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி செய்யலாம் என்று டாக்டர் கோர் குறிப்பிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும்படி அவர் களுக்கு ஆலோசனை கூறப்படும் என்று அவர் தெரிவித்தார். கொசுக் கடியிலிருந்து தப்பிக்க அவர்களுக்கு ஆலோசனை கூறப்படும் என்றார் அவர்.

"மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாத ஸிக்கா நோயாளிகளைத் தடுத்து வைக்கும் நடைமுறையை நாங்கள் மறுபரி சீலனை செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். அத்தகைய நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பி அங்கேயே குணமடையச் செய்யலாம். "இருந்தாலும் அவர்கள் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு கொசுக்கடியிலிருந்து தப்பவேண்டும்," என்றார் அமைச்சர். ஹோங் கா நார்த்தில் சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்தகைய நோயாளிகள் பொதுவாக உடல் நலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு லேசான அறிகுறி தான் தெரிகிறது. பாதிப்பு இல்லை என்று தெரிந்ததும் ஓரிரண்டு நாட் களில் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். இதன் காரணமாகவே இந்த நடைமுறை இப்போது மறுபரிசீலனை செய்யப் பட்டு வருகிறது.