ஃபேர்பிரைஸ் வலியுறுத்து: கொசு மருந்துகளை சேகரித்து வைக்காதீர்

ஃபேர்பிரைஸ் வலியுறுத்து: கொசு மருந்துகளை சேகரித்து வைக்காதீர்

2 mins read
3af9c1d9-9817-485b-8035-f2c67b6bbec0
-

சிங்கப்பூர் முழுவதும் பேரங்காடிகளை நிறுவியிருக்கும் என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம், கொசுக் களை விரட்ட உதவும் மருந்துகளை வாங்கிச் சேகரித்து வைக்க வேண் டாம், தேவை ஏற்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும் என்று தமது வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. "எங்களுடைய பேரங்காடி களுக்குக் கூடுதலாக கொசு மருந்துகளை அனுப்பியிருக்கிறோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். விலையையும் நிலையாக வைத்திருப் போம்," என்று என்டியுசி ஃபேர் பிரைசின் தலைமை நிர்வாக அதி காரி சியா கியான் பெங் நேற்றுத் தெரிவித்தார்.

"இதனால் கொசு மருந்துகளை சேகரித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் தொடர்ந்து கொசு மருந்துகளை விநியோகிப்போம். என்ன தேவை யோ அதை மட்டுமே வாங்க வாடிக் கையாளர்களை கேட்டுக் கொள் கிறோம். "அப்போதுதான் மற்றவர் களுக்கும் கொசுக்களை விரட்டும் மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது," என்றார் அவர். சிங்கப்பூரில் 130 பேரங்காடி களை நடத்தும் ஃபேர்பிரைஸ், கடந்த வாரம் ஸிக்கா சம்பவங்கள் அதிகரித்ததால் தங்களுடைய கடைகளில் கொசு மருந்து தீர்ந்து விட்டதாகக் கூறியிருந்தது.

நேற்றைய நிலவரப்படி உள்ளூரிலேயே 273 ஸிக்கா தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பல வகையான கொசுக்களை விரட்டும் மருந்துகள், கொசு எதிர்ப்பு மருந்துகள் கூடுதலாக 175,000 தருவிக்கப் படுவதாக ஃபேர்பிரைஸ் குறிப் பிட்டது. இது, ஸிக்கா சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு வழக்கமான வார விற்பனைக்குத் தேவையான மருத்துகளைவிட பத்து மடங்கு அதிகமாகும். ஒட்டுவில்லை, மேல்பூச்சு, வாசனைத் திரவம், தெளிப்பான் உட்பட 36 வகையான கொசு மருந்துகளை ஃபேர்பிரைஸ் பேரங் காடி விற்பனை செய்து வருகிறது.

ஜூரோங் பாயிண்டில் ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடியில் ஸிக்கா கிருமி தொற்றுவதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை வலியுறுத்தும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்