அதிபர் ஆலோசனை மன்றத்தை விரிவுபடுத்தி, அதிபருக்கும் அர சாங்கத்திற்கும் இடையில் மோதல் ஏற்படும்போது மன்றத்தின் கருத் துக்குக் கூடுதல் மதிப்பளிக்க வேண்டும் என அரசமைப்புச்சட்ட ஆணைக்குழு பரிந்துரைக்கிறது. ஆணைக்குழுவின் அறிக்கை, எல்லா நிதி விவகாரங்களிலும் அரசாங்கச் சேவை நியமனங்களி லும் அதிபர் தனது ரத்து அதி காரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக மன்றத்தை ஆலோசிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இப்போது, இத்தகைய சில விவ காரங்களுக்கு மட்டுமே மன்றத்தை அதிபர் ஆலோசிக்கவேண்டும்.
"அதிபரின் ரத்து அதிகாரத்தை நாடாளுமன்றம் எப்போது மீறமுடி யும் அல்லது மீறமுடியது என்பதை எளிமைப்படுத்துமாறும் ஆணைக் குழு யோசனை கூறியது. சில விவகாரங்களில் நாடாளுமன்றம் மீற அனுமதிக்கப்படுவதும் மற்ற விவகாரங்களில் மீற அனுமதிக்கப் படாததற்கும் எந்தவொரு விளக்க மும் இல்லை," என்று அறிக்கை குறிப்பிட்டது. சிங்கப்பூரின் காப்புநிதி தொடர் பான நிதி விவகாரங்கள், பொதுச் சேவை நியமனங்கள் அனைத்திலும் அதிபர் தனது ரத்து அதிகாரத் தைப் பயன்படுத்துவதற்கு முன் பாக மன்றத்தின் ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது அறிக்கையின் பரிந்துரை.
அதிபர் ஆலோசனை மன்றத்தின் உறுப்பினர்கள் (இடமிருந்து) ஸ்டீஃபன் லீ, லீ சு யாங், கோ ஜூன் செங், எஸ். தனபாலன், ஜெ. ஒய். பிள்ளை, போஆட் மாத்தார், பாபி சின், லிம் சீ ஓன். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

