சிங்கப்பூரில் நடைபெறும் எஃப்1 பந்தயத்தை முன்னிட்டு இம் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை எஸ்எம்ஆர்டி நிறுவனம் அதன் ரயில் மற்றும் பேருந்துச் சேவைக்கான நேரத்தை நீட்டிக்கவிருக்கிறது. 16ஆம் தேதியன்று வடக்கு- தெற்கு ரயில் பாதையிலும் கிழக்கு- மேற்கு ரயில் பாதையிலும் கடைசி ரயில்வண்டிகள் பின்னிரவு 1.30 மணிக்குப் புறப்படும். 17ஆம், 18ஆம் தேதிகளில் கடைசி ரயில் வண்டிகள் பின்னிரவு 1.11 மணிக்குப் புறப்படும். 16ஆம் தேதியன்று வட்டப் பாதையில் டோபி காட் நிலையத்திலிருந்து கிளம்பிச் செல்லும் ரயில்வண்டி பின்னிரவு 12.57 மணிக்குப் புறப்படும். 17ஆம், 18ஆம் தேதிகளில் பின்னிரவு 12.40 மணிக்குப் புறப்படும்.
ஹாபர்ஃபிராண்ட் நிலை யத்திலிருந்து கிளம்பிச் செல்லும் கடைசி ரயில்வண்டி 16ஆம் தேதியன்று பின்னிரவு 12.21 மணிக்குப் புறப்படும். 17ஆம், 18ஆம் தேதிகளில் பின்னிரவு 12.02 மணிக்குப் புறப்படும். சுவா சூ காங் நிலையத் திலிருந்து கிளம்பிச் செல்லும் எல்ஆர்டி ரயில் சேவை 16ஆம் தேதியன்று பின்னிரவு 2.28 மணி வரை நீட்டிக்கப்படும். 17ஆம், 18ஆம் தேதிகளில் பின்னிரவு 2.07 மணி வரை நீட்டிக்கப்படும். கடைசி ரயில் வண்டிகளில் பயணம் செய்பவர் களுக்கு வசதியாகக் குறிப்பிட்ட சில பேருந்துச் சேவைகளின் சேவை நேரமும் மாற்றி அமைக் கப்படும்.
சுவா சூ காங், செம்பவாங், உட்லண்ட்ஸ், யீஷூன் ஆகிய வட்டாரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள பேருந்துகள் இதில் அடங்கும். மேல் விவரங்களுக்கு வார நாட்களில் காலை மணி 7.30 லிருந்து மாலை 6.30 மணி வரை 1800-=336=8900 எனும் எண்ணுடன் தொடர்புகொள்ள லாம். அல்லது www.smrt.com.sg எனும் இணையப்பக்கத் துக்குச் செல்லலாம்.