தெங்கா நகர உருவாக்கத்தில் கணினி மென்பொருள் மாதிரித் தோற்றங்கள்

தெங்கா நகர உருவாக்கத்தில் கணினி மென்பொருள் மாதிரித் தோற்றங்கள்

1 mins read
a2cae797-4142-4c02-8276-5fea5b2e334e
-

சிங்கப்பூரில் இன்னும் 20 ஆண்டு காலத்தில் தெங்கா என்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புதிய நகரம் உருவாக்கப்பட இருக் கிறது. அந்த நகரில் வெப்பநிலை குறைவாக இருக்கவும் அருமை யான காற்றோட்டம் இருக்கவும் வகை செய்ய கணினி மாதிரித் தோற்றங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஒரு நகரம் முழுவதும் பரந்த அளவில் இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. தெங்கா நகரம் இப்போதுள்ள பீஷான் குடியிருப்புப் பேட்டை அளவிற்கு 700 ஹெக்டேர் பரப்பில் அமைந் திருக்கும். அந்த நகர் பச்சைப் பசேலென்று இருக்கும்.

காட்டுவளப் பகுதி, காரில்லா நகர மையம் போன்ற இயற்கை வளங்களைக் கட்டிக்காக்கும் அம் சங்களும் அந்த நகரில் இருக்கும். இதற்காக சிறப்பான ஒரு மென் பொருள் கணினியில் பயன்படுத் தப்படும். அதைக்கொண்டு வீவக திட்ட வல்லுநர்கள் பல்வேறு வகை யிலான தெங்கா நகரை வடிவமைப் பார்கள். புள்ளிவிவரங்களைச் சேகரித்து இறுதி வடிவத்தை கொடுப்பார்கள் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெங்கா கண்காட்சியைத் தொடங்கிவைத்த போது குறிப்பிட்டார்.

தெங்கா புது நகர பொது குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றான 'வனக் குன்று' பகுதியைக் காட்டுப்பாதையும் நகர மையப் பூங்காவும் சூழ்ந்திருக்கும். படம்: வீவக