உலக சாதனையுடன் முதல் தங்கம்

உலக சாதனையுடன் முதல் தங்கம்

1 mins read
a218d23c-069e-45c9-b158-e108f3863bce
-

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் உடற்குறையுள்ளோருக் கான பாராலிம்பிக் போட்டிகளில் புதிய உலக சாதனையுடன் சிங்கப் பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்து பெருமை தேடிக் கொண்டார் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ, 24. சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை நடந்த 100 மீட்டர் மல்லாந்து நீச்சல் எஸ்2 போட்டியில் 2 நிமிடம் 7.09 வினாடிகளில் பந்தய தூரத்தை நீந்திக் கடந்து முதலா வதாக வந்தார் யிப். சீனாவின் ஃபெங் யாஸு, உக்ரேன் நாட்டின் ஐரினா சோட்ஸ்கா ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.

தசை வலுவிழப்பு குறைபாடு உள்ள பின் சியூ, இவ்வாண்டு போர்ச்சுகலில் நடந்த அனைத்துலக பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 100 மீ. மல்லாந்து எஸ்2 போட்டியை 2 நிமிடம் 9.79 வினாடிகளில் முடித்ததே முந்தைய உலக சாத னையாக இருந்தது. இப்போது, தமது சாதனையையே அவர் முறி யடித்துள்ளார். "என்னால் முடிந்த அளவிற்கு மிக வேகமாக நீந்த முயன்றேன். என்னை யார் நெருங்குகிறார்கள் என்றுகூட என்னால் பார்க்க முடிய வில்லை. இலக்கைத் தொட்டதும் சிங்கப்பூர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்ததைத்தான் நான் முதலில் கண்டேன்.

உடற்குறையுள்ளோருக்கான பாராலிம்பிக் போட்டிகளில் 100 மீ. மல்லாந்து நீச்சல் எஸ்2 பிரிவில் தங்கம் வென்று சாதித்த சிங்கப்பூரின் யிப் பின் சியூ. படம்: ராய்ட்டர்ஸ்