தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட் டதைக் கண்டித்து மீண்டும் ஒரு போராட்டத்திற்கு கர்நாடக மாநிலம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டுக்குக் காவிரி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்தும் தண் ணீரைத் திறந்துவிட்ட கர்நாடக அரசைக் கண்டித்தும் கர்நா டகத்தில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக மண்டியா மாவட் டத்தில் பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முழுஅடைப்புப் போராட்டம் நடந்தது. நேற்றும் தொடர்ந்து 7வது நாளாக மண்டி யாவில் விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களில் பேரணி சென்ற கன்னட அமைப் பினர், மாநில அரசு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டியா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மண்டியாவைத் தவிர இதர பகுதிகள் இயல்புநிலைக்கு திரும் பியதைத் தொடர்ந்து பெங்களூ ருவில் இருந்து மலவள்ளி வழியாக மைசூருவுக்குப் பேருந்து கள் இயக்கப்பட்டன. ஆனால் விவசாயிகளும் கன்னட அமைப் பினரும் பெங்களூரு-மைசூரு சாலையில் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின் றன. மேலும் சாலைகளில் அவர் கள் டயர்களைக் கொளுத்தி தடை ஏற்படுத்தினர். இந்நிலையில், கர்நாடக மாநி லத்தில் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இளையர் ஒருவர் தாக் கப்பட்ட சம்பவம் சமூக ஊடக் கங்களில் தீயாகப் பரவி வரு கிறது. சந்தோஷ் என்னும் அந்த இளையர் பெங்களூருவி லுள்ள {ராமபுரத்தைச் சேர்ந்த வர். பனஷங்கரி என்னும் இடத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார்.
தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் திறந்துவிடப்பட்டதைக் கண் டித்துக் கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் தில் முன்னணி கன்னட நடிகர் கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நடிகர்கள் போராட்டத் தில் கலந்துகொண்டதைக் கேலி செய்து சந்தோஷ் தமது ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரி வித்து இருந்தார். அதனை அறிந்த கன்னட இளையர் குழு ஒன்று நேற்று முன்தினம் சந்தோஷை தேடியது. இறுதியில் அவர் படித்து வரும் கல்லூரியிலேயே சந் தோஷை பிடித்த குழு தனியாக ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக் கியது. சுற்றி நின்ற நான்கைந்து பேர் சந்தோஷின் முகத்தில் குத்தினர்.
காவிரி நீர் போராட்டத்திற்கு கர்நாடகாவில் உள்ள தமிழர்களும் ஆதரிக்க வேண்டும் என்று அவரது வாயாலேயே சொல்ல வைத்துத் துன்புறுத்திய அந்தக் குழு. சந்தோஷ் தாக்கப் படுவதைப் படமாக எடுத்த கன்னட இளையர்கள் பின்னர் அதனை சமூக ஊடகங்களில் பரப்பிவிட்டனர். அதனைக் கண்ட தமிழக அரசியல்வாதிகள் கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர். தமிழ் இளையர் சந்தோஷை தாக்கிய கர்நாடக கும்பல். படம்: ஊடகம்

