மோசமான வானிலை சிங்கப் பூரின் தண்ணீர் விநியோகத்திற்கு மிரட்டலாக அமையக் கூடும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். ஆகையால் தண்ணீரைச் சேமிப்பது என்பது இன்றி யமையாத ஒன்று என அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வானிலிருந்து எடுக்கப்பட்ட ஜோகூரின் லிங்கியு நீர்த்தேக்க புகைப்படங்களை திரு லீ பகிர்ந்துகொண்டுள்ளார். இரு வாரங்களுக்கு முன்பு சீனாவுக்குச் செல்லும் வழியில் அவர் எடுத்த அந்தப் படம் நீர்த்தேக்கத்தின் தண்ணீர் கொள்ளளவு கால்பங்கு மட் டுமே இருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் குறை வான மழையின் காரணமாக ஏற்பட்ட வறட்சி நிலைகளுக்குப் பிறகு நீர்த்தேக்கம் அடைந்தி ருக்கும் நிலை அது.
'கூகல் எர்த்' மூலம் எடுக் கப்பட்ட மற்றொரு படத்தையும் பிரதமர் பகிர்ந்துள்ளார். துணைக்கோளப் படமான அது லிங்கியு நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதைக் காட்டுகிறது. இரு படங்களுக்கு இடையி லான வித்தியாசம் தெளிவானது என்றும் கவலை அளிக்கக் கூடியது என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். "சிங்கப்பூர் நல்லவேளையாக பல்வேறு இயற்கைப் பேரிடர் களில் இருந்து காக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் தண்ணீர் விநியோகம் என்பது இன்னமும் வானிலையின் கருணையை நம்பியே இருக்கி றது," என்றார் திரு லீ.

