பிரதமர் பதவிக்கான ஆள் நான் இல்லை: தர்மன் உறுதி

2 mins read
e50c13e5-a4a7-4cb9-b124-94f804115e92
-

'பிரதமர் பதவிக்கான நபர் நான் அல்ல' என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (படம்) தெரிவித்துள்ளார். தலைமைத்துவ மாற்றம் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்திய 'யாஹூ சிங் கப்பூர்' கடந்த வாரம் ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. ஆய்வில் பங்கேற்ற 897 பேரில் 69 விழுக்காட்டினர் பிர தமர் பதவிக்கான வேட்பாளராக தர்மன் சண்முகரத்னத்தை ஆத ரித்து கருத்து தெரிவித்ததாக அந்த ஆய்வறிக்கை குறிப்பிட் டிருந்தது. நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங் கேற்க வந்த திரு தர்மனிடம் அது குறித்துக் கேட்கப்பட்டது. "பிரதமருக்கான ஆள் நான் அல்ல என்பதை மிகவும் தெளி வாகத் தெரிவித்துக்கொள் கிறேன். அது நான் கிடையாது. என்னைப் பற்றியும் என்னால் என்ன செய்யமுடியும் என்றும் எனக்குத் தெரியும்.

"கொள்கை வகுப்பில் நன்கு செயல்படுவதைப்போல பிரதம ருக்கு உறுதுணையாக இருப்ப திலும் நான் சிறந்தவன். ஆனால், பிரதமர் ஆகமாட்டேன்," என்றார் திரு தர்மன். பொருளியல் நிலவரம் சிங்கப்பூரின் பொருளியல் நிலவரம் குறித்துத் தெரிவித்த திரு தர்மன், சிரமமான நிலைமை இன்னும் கொஞ்சகாலத்துக்கு நீடிக்கும் என்றார். "இந்த ஆண்டின் முதல் பாதி யில் மெதுவான வளர்ச்சி இருந் தது. ஆனால், இரண்டாம் பாதி யில் வளர்ச்சி பலவீனமாக இருக்கும் என்று கருதுகிறேன். "அதனால், அடிமட்ட அள வில் 1-2 விழுக்காடு என்ற விகி தத்தில் அது இருக்கக்கூடும்," என்றார். மெதுவான வளர்ச்சி சில காரணிகளைப் பிரதிபலிப்பதாக அவர் சொன்னார். "கட்டமைப்பு ரீதியாக சிங்கப்பூர் புதிய கோணத் தில் வளர்ந்து வருகிறது.