பீஷான் சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் மொத்தம் ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன. அவற்றில் இரண்டு கார்கள், இரண்டு லாரிகள், ஒரு பிக்-அப் வேன் ஆகியவை அடங்கும். பீஷான் சாலையில் அமைந்துள்ள எஸ்எம்ஆர்டி பணிமனையின் வாசலுக்கு அருகில் விபத்து நிகழ்ந்ததாக காலை 7.50 மணிக்குத் தகவல் கிடைத்தது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்று உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய 20 வயது மதிக்கத்தக்க ஆடவரும் பெண்ணும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். அந்த ஆடவரின் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண்ணுக்கு வலது தோள்பட்டையில் வலியும் இடது கணுக்காலில் வீக்கமும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பீஷான் சாலையில் விபத்துக்குள்ளான ஐந்து வாகனங்கள்; இருவர் காயம்
1 mins read
-

