சிங்கப்பூரில் இந்த அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் புரிந் துணர்வு மாதமாகக் கடைப்பிடிக் கப்படுகிறது. இதனையொட்டி எம்ஆர்டி ரயில் வண்டிகளில் இளம் சிவப்புநிற விளம்பரங்கள் இடம் பெற்று அவை மார்பகப் புற்றுநோய் பற்றிய புரிந்துணர்வை மக்களிடம் மேம்படுத்தும். அந்த ரயில் வண்டிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அறநிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் ஆதரவு அளிக்கிறது. மார்பகப் புற்றுநோய் பற்றிய உள்நாட்டு புள்ளிவிவரங்களை அந்த விளம் பரங்கள் எடுத்துக்காட்டும். பயணிகளிடையே பணிவன் புடன் கூடிய பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கவும் அந்த விளம்பரங் கள் உதவும் என்று இந்த அற நிறுவனம் தெரிவித்தது. இந்த ரயில் வண்டிகள் ஒரு மாதம் சேவையில் இருக்கும்.
முழுச் சமூகத்தையும் எட்டும் வகையில் மக்களுக்கு இத்தகைய செய்திகளைக் கொண்டுசென்று அவர்களிடம் மார்பகப் புற்றுநோய் பற்றிய சிந்தனையைத் தூண்டி விடுவது இதன் நோக்கம் என்று மார்பகப் புற்றுநோய் அறநிறுவனத் தின் தலைவர் நூர் குவெக் கூறி னார். அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், புரிந்துணர்வு ரயில் வண்டியை நேற்றுத் தொடங்கிவைத்தார். சிங்கப்பூரில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய்தான் பொது வான ஒன்றாக இருக்கிறது என் பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், புற்றுநோய் காரணமாக மரண மடையும் பெண்களில் 18% மார் பகப் புற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றார். சிங்கப்பூரில் 2010ஆம் ஆண் டிற்கும் 2014ஆம் ஆண்டிற்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,850 பெண்களுக்கு மார் பகப் புற்றுநோய் இருப்பது கண்ட றியப்பட்டுள்ளது.

