தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் காலமானதைத் தொடர்ந்து சிங்கப்பூரிலுள்ள தாய் லாந்து மக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள தாய் லாந்து தூதரகத்தில் அந்நாட்டு கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது. தாய்லாந்தில் உள்ள ரட்வினிட் பேங்கேயோ பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்களும் நான்கு ஆசிரி யர்களும் சிங்கப்பூருக்கு விடு முறைப் பயணம் வந்துள்ளனர். நாளை வரை இங்கு இருக்கத் திட்டமிட்ட அவர்கள் தாய்லாந்து தூதரகத்தின் வாசலில் நேற்றுக் காலை காணப்பட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது.
பின்னர் தங்களது இரங்கலை அங்குள்ள அலுவலர்களிடம் தெரிவித்ததாக சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்த 'எஸ்எஸ்ஜி தாய்லாந்து' நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையே, அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மெதடிஸ்ட் பள்ளியில் படிக்கும் தாய்லாந்து மாணவர் களுக்கு நேற்று விடுப்பு அளிக்கப் பட்டது. அவர்கள் புக்கிட் மேரா விலுள்ள தாய்லாந்துவாசிகளின் பௌத்த ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். "மன்னர் மறைந்த செய்தி கேட்டு எங்களில் பலர் காலையில் இருந்து அழுதுகொண்டு இருக்கி றோம். அவர் எங்களது இரண்டா வது தந்தையைப் போன்றவர். நான் அவரைச் சந்தித்ததில்லை என்றபோதிலும் எங்கள் குடும் பத்தில் ஒருவராக மன்னரை நேசிக்கிறேன்," என்று ஸ்டேம்ப் பிரோம்ஃபான், 15, என்னும் மாண வர் தெரிவித்தார். தாய்லாந்து தூதரகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரங்கல் புத்தகம் வைக்கப்பட்டு இருக்கும்.
செயின்ட் பிரான்சிஸ் மெதடிஸ்ட் பள்ளியைச் சேர்ந்த தாய்லாந்து மாணவர்கள் புக்கிட் மேரா ரோட்டில் உள்ள தாய்லாந்துவாசிகளின் பௌத்த ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

