ஆகப் பெரிய பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி

ஆகப் பெரிய பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி

2 mins read
99e8e403-b4da-4518-aed5-e632bb99fcdd
-

சந்தேகத்திற்குரிய நடவடிக்கை களை அடுத்து உச்ச விழிப்பு நிலையுடன் இருக்கும் வகையில் மரினா பே நிதி மையத்திலும் ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தின் மையப் பகுதியிலும் ஆயுதமேந் தியபடி போலிஸ் அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் கண் காணிப்புப் பணிகளை நேற்று மேற்கொண்டனர். பாவனை பயங்கரவாதச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தக் கூட்டு சுற்றுக் காவல் நடவடிக்கைகள் இடம் பெற்றன.

ஆசியான் வட்டாரத்தில் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நிகழ்ந்ததை அடுத்து சிங்கப் பூருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்படு கிறது. இதையடுத்து, போலிஸ் தலைமையில் தீவு முழுவதும் நேற்று பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி இடம்பெற்றது. இதற்கு முன், பல அமைப்புகள் சேர்ந்து இவ்வளவு பெரிய அளவில் பாவனை பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகளை இங்கு மேற்கொண் டதில்லை. சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் ஆயுதப் படை, மற்ற உள்துறைக் குழுக்களைச் சேர்ந்த 3,200க்கும் மேற்பட்டோர் இந்தப் பாவனைப் பயிற்சியில் பங்கெடுத்தனர். நேற்றுக் காலை யில் தொடங்கிய இந்த பயங்கர வாத எதிர்ப்புப் பாவனைப் பயிற்சி இன்று காலை 4 மணிக்கு முடி வடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு முக்கிய சிங்கப்பூர் அமைப்புகளின் தயார்நிலையையும் நெருக்கடியான சூழ்நிலை களை அவை எவ்வாறு எதிர் கொள்கின்றன என்பதையும் சோதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாவனைப் பயிற்சி இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு 'பயங்கர வாத விழிப்புநிலை' குறித்த தகவல் கிடைத்ததும் துப்பாக்கிக் குண்டுகள் அடங்கிய ஆடையுடனும் கைகளில் 'SAR 21' ரக துப்பாக்கிகளுடனும் களத்தில் இறங்க சிங்கப்பூர் ஆயுதப்படை யினர் தயாராகினர். பிறகு அவர்கள் 'தீவுத் தற்காப்பு பணிப் படை'யின் ஒரு பகுதியாக சுற்றுக்காவல் பணிகளில் ஈடு படுத்தப்பட்டனர்.

பாவனைப் பயிற்சியின்போது 'பயங்கரவாதி'யை மடக்கிப் பிடிக்கும் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்