750 இல்லங்களில் பெருகிய தீபாவளி 'கொடை' ஒளி

750 இல்லங்களில் பெருகிய தீபாவளி 'கொடை' ஒளி

2 mins read
b5a8bcb3-7718-43d8-b234-fefd248fc8f4
-

யாஸ்மின் பேகம்

கிட்­டத்­தட்ட 750 குடும்பங்களின் இல்­லங்களில் இவ்­வாண்டு முன்­கூட்­டியே தீபாவளி ஒளி பிர­கா­ச­மாக வீசத் தொடங்­கி­யுள்ளது. 'லைட்டிங் ஹார்ட்ஸ், லைட்டிங் ஹோம்ஸ்' எனும் திட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபா­வ­ளியை முன்­னிட்டு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இத்­திட்­டத்தைத் தொடங்கியவர் திரு லோகப்­ பி­ரி­யன் ரெங்க­நா­தன் என்றாலும் இவர் தனி ஒரு­வ­ராக இதனைச் செய்­வ­தில்லை. பல­ரி­ட­மி­ருந்து பொருட்­களை நன்­கொடை­யா­கப் பெற்று அவற்றை அன்­ப­ளிப்­புப் பைக­ளா­கப் பிரித்து மேலும் பல தொண்­டூ­ழி­யர்­களின் உதவி­யு­டன் அவை வசதி குறைந்த இல்­லங்களுக்­குக் கொண்டு செல்­லப்­படு­கின்றன.

இத்­திட்­டத்­தில் பயன் அடையும் ஒவ்வொரு குடும்ப­மும் இரண்டு அன்­ப­ளிப்பு பைகளைப் பெறு­வார்­கள். ஒரு பையில் அரிசி, மசாலா, எண்ணெய், சக்கரை என பல மளிகைப் பொருட்­களும் இன் னொரு பையில் முறுக்கு, இனிப்பு போன்ற தீபாவளி பல­கா­ரங்களும் அகல் விளக்­கு­களும் இருக்கும். சமூக ஊட­கங்கள், வாய்வழி விளம்ப­ரம் மூலம் இந்த திட்­ட­த்திற்­காக இவ்­வாண்டு ஒன்­றி ணைந்த 250க்கும் மேலான தொண்­டூ­ழி­யர்­கள் பொருட்­களை அன்­ப­ளிப்புப் பைகளில் வைக்­க­வும் அவற்றை வீடு­களுக்­குக் கொண்டு செல்­ல­வும் உதவினார்­கள்.

இந்த ஆண்டு பண­மா­க­வும் பொரு­ளா­க­வும் $90,000க்கும் மேலான நன்கொடை இத்­திட்­டத்­திற்­கா­கப் பெறப்­பட்­டது. அதில் ரொக்­க­மாக $30,000-ஐ தொண்­டூ­ழி­யர்­கள் வழங்­கி­னர். இந்திய குடும்பங்களைத் தாண்டி இந்த ஆண்டு மற்ற இன வசதிக் குறைவான குடும்பங்களுக்­கும், 'MI­N­DS, Ce­r­e­b­r­al Pa­l­sy As­s­o­ci­a­ti­on' என்னும் அமைப்­பு­ களிலி­ருந்து சிரமப்­படும் குடும் பங்களுக்­கும் இத்திட்டம் உதவ ஆரம்­பித்­தி­­ருக்­கிறது. இவர்­களுக்­கான அன்­ப­ளிப்பு பைகளில் குளி­ய­லறை தொடர்­பான பொருட்­களும் சேர்ந்­து கொடுக்­கப்­படு­கின்றன.

கிடைக்கப்பெற்ற தீபாவளிப் பொருட்களை தொண்டூழியர்கள் ஒன்றாக இணைந்து பைகளில் அடுக்கி வைக்கின்றனர். படம்: லைட்டிங் ஹார்ட்ஸ், லைட்டிங் ஹோம்ஸ்