தொண்டு நிறுவனம் முயற்சி; 200 குடும்பங்களில் வந்தது தீபாவளி மகிழ்ச்சி

தொண்டு நிறுவனம் முயற்சி; 200 குடும்பங்களில் வந்தது தீபாவளி மகிழ்ச்சி

2 mins read
c621e228-93be-40b0-b132-ac4f97bbba99
-

யாஸ்மின் பேகம்

ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வசதி குறைந்த குடும்பகளுக்கு உதவிக் கரம் நீட்டி வரும், 'நுலைஃப் கேர் அண்ட் கவுன்சலிங் சர்வீசஸ்' (NuLife Care and Counselling Services) எனும் தொண்டு நிறுவனம் இந்த ஆண்டும் தவறாமல் தீபா வளியை முன்னிட்டு பெரியளவில் 200 குடும்பங்களுக்கு உதவி அளித் திருக்கிறது. வசதி குறைந்த குடும்பங்கள், சிரமப்படும் முதியவர்கள் மற்றும் உடற்குறையாளருக்கு மளிகை, மசாலாப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை இந்த அமைப்பினர் வழங்கி இருக்கிறார்கள். தீபாவளியை எல்லா குடும்பங் களும் எந்தக் குறையின்றி நண்பர் கள், உறவினர்களுடன் கொண்டாட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்கிறார் இந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ‌ஷீனா ஜேபால்.

நன்கொடையாகக் கொடுக்கப் பட்ட அழகிய சேலைகள், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய அளவு கைத்தறிச் சட்டைகள் கேம்பல் லேனில் அமைந் துள்ள தீபாவளிச் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்பட்டு அதன் மூலம் திட்டத்துக்குத் தேவை யான தொகை திரட்டப்பட்டது. தொண்டூழியரும் ஆசிரியருமான திருமதி ஷோபா வர்கீஸ், 60 சேலை களைத் தன் நண்பர்களிடமிருந்து திரட்ட உதவினார்.

"இந்தியப் பெண்கள் சிலர் ஒரு சேலையை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தமாட் டார்கள். சிறந்த நிலையில் உள்ள இந்தச் சேலைகள் வீணாகாமல் ஓர் அறப்பணிக்கு உதவும் வகையில் அவை திரட்டப்பட்டு நன்கொடையாக வழங்கப்படுகின்றன." என்று இவர் தெரிவித்தார். நன்கொடைகள் சிறந்த முறை யில் வசதி குறைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதால், வரும் ஆண்டுகளிலும் தாம் தொடர்ந்து உதவ இருப்பதாகக் கூறுகிறார் ஷோபா. 'நுலைஃப் கேர் அண்ட் கவுன்சலிங் சர்வீசஸ்' இந்த ஆண்டு பணமாகவும் பொருளாக வும் $40,000 திரட்டியுள்ளது.

'நுலைஃப் கேர் அண்ட் கவுன்சலிங் சர்வீசஸ்' அமைப்பின் தொண்டர்களான (இடமிருந்து) அபராஞ்சி ரமேஷ், பிரியதர்‌ஷினி ஜெயமணி, ஜனனி குமார் ஆகியோர் உதவி தேவைப்படும் குடும்பங் களுக்கான காய்கறிகளைப் பொட்டலம் கட்டுகிறார்கள்.