நீட்டிக்கப்பட்ட புதிய பாதையில் கூடுதல் சாலை மூடல் நேரத்துடன் இரண்டு மாத இடை வெளிக்குப் பிறகு நேற்று மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'கார்களில்லா ஞாயிறு' நிகழ்ச்சியில் கலந்துகொண்டோரிடையே உற்சாகம் கரைபுரண்டோடியது. நகர வட்டாரம், மத்திய வர்த்தக வட்டாரம் ஆகியவற்றில் 5.5 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்துப் பாதைகள் நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை மூடப்பட்டிருந்தன. சைக்கிளோட்டுதல், நடைப்பயிற்சி போன்ற குழு நடவடிக்கை களில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
முந்தைய 'கார்களில்லா ஞாயிறு' நிகழ்ச்சிகளுக்காக 4.7 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே பாதைகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சைக்கிள்கள், சருக்கு உருளைகள் போன்றவற்றுடன் பங்கேற்க வந்திருந்தவர்கள் செல்லப் பிராணிகளையும் உடன் கொண்டு வந்திருந்தனர். இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி அரசாங்க அமைப்புகள் மக்களிடம் தகவல் களைப் பகிர்ந்துகொண்டன. பெரும்பாலானவர்கள் வாகனம் ஓட்டாமல் இருப்பது, சமூக நிகழ்வுகள் போன்ற பிற பயன் பாடுகளுக்காக சாலைகளைத் திறந்துவிடுவது ஆகியவற்றை ஊக்குவிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய இலக்கு என நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நகர மறுசீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டது.2016-10-31 06:00:00 +0800

