கட்டுமான இடத்தில் லாரி ஏறி ஊழியர் இருவர் மரணம்

கட்டுமான இடத்தில் லாரி ஏறி ஊழியர் இருவர் மரணம்

1 mins read
50ede9d9-0991-4680-a861-e7e1ae35d669
-

மண்டாய் கட்டுமான இடம் ஒன்றில் நேற்று இரண்டு ஊழியர் கள் மரணமடைந்துவிட்டார்கள். அந்தக் கட்டுமான இடத்தில் இந்த ஆண்டில் இதுவரையில் இரண்டாவது மரண விபத்து நிகழ்ந்திருக்கிறது. எண் 20 லோரோங் லாடா ஹீத்தாம் என்ற முகவரியில் இருக்கும் கட்டுமான இடத்தில் விபத்து நிகழ்ந்திருப்பதாக பிற்பகல் 1.15 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்றுத் தெரிவித்தது.

இந்தப் படையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தனர். 30க்கும் அதிக வயது இருக்கும் ஆடவர் ஒருவர் இறந்துவிட்டதாக அங்கு அறிவிக்கப்பட்டது.

மண்டாய் கட்டுமான மனைக்கட்டு ஒன்றில் லாரி ஏறி ஊழியர் இருவர் மாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்