ஜகார்த்தாவில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போர்க்கொடி

ஜகார்த்தாவில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போர்க்கொடி

1 mins read
d19152ff-c140-4626-8fd2-eb25d7a95816
-

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநரான திரு பசுக்கி ஜாஜா புர்ணாமா பதவி விலகவேண்டும் என்று கோரி தீவிரவாதப் போக்கு கொண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அந்நகரில் நேற்றுப் பேரணி நடத்தினர்.

ஆஹோக் என்று அழைக் கப்படும் திரு புர்ணாமா, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இழிவுபடுத் தியதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த திரு புர்ணாமா, ஜகார்த் தாவின் ஆளுநராகப் பதவியேற் றுள்ள முதல் சீன இனத்த வராவார். உலகிலேயே ஆக அதிக மான இஸ்லாமியர்களைக் கொண்டுள்ள இந்தோனீசியா வில் பெரும்பாலும் மிதமான போக்குகொண்ட இஸ்லாம் கடைபிடிக்கப்படுகிறது.

ஜகார்த்தா ஆளுநரின் அலுவலகத்தைப் பேரணி கடந்து சென்றபோது லாரிகளில் பயணம் செய்தவாறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒலிப்பெருக்கி வாயிலாக திரு புர்ணாமாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். பேரணியில் கிட்டத்தட்ட 200,000 பேர் கலந்துகொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. படம்: ஏஎஃப்பி