சிங்கப்பூர்- இந்தோனீசிய நிறு வனங்கள் இணைந்து இந்தோனீ சியாவில் உருவாக்கவுள்ள மிகப் பெரிய தொழிற்பூங்காவை சிங்கப் பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் நேற்று அதிகார பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். மத்திய ஜாவாவின் செமராங் பகுதியில் 2,700 ஹெக்டர் பரப் பளவில் அமைந்துள்ள 'கெண்டல்' தொழிற்பூங்காவை சிங்கப்பூரின் செம்கார்ப் டெவலப்மெண்டும் இந் தோனீசியாவின் பிடி ஜாபாபெகா நிறுவனமும் இணைந்து உரு வாக்குகின்றன.
"இந்தத் திட்டம் இரு நாட்டுக் கும் பயனளிக்கும் திட்டம்" என் றார் பிரதமர் லீ. தொடக்கவிழாவில் பேசிய திரு லீ, "இரு நாட்டு பொருளியல்களும் பின்னிப் பிணைந்தவை. இந்தோனீ சியா சிறந்து விளங்கினால் சிங்கப்பூரும் சிறக்கும். அதனால் தான் இந்தோனீசியா வெற்றிபெற வேண்டும் என சிங்கப்பூர் விரும் புகிறது," என்றார்.
செமராங்கில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அவரது துணைவியார் ஹோ சிங் இருவருக்கும் இரியானா விடோடோ (வலது) பாத்தெக் கலையைச் சொல்லித் தருவதை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (இடமிருந்து இரண்டாவது) பார்வையிடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

