பாகிஸ்தானைப் பயங்கரவாத நாடாக அமெரிக்கா அறிவிக்கும் - டிரம்ப் ஆலோசகர்

பாகிஸ்தானைப் பயங்கரவாத நாடாக அமெரிக்கா அறிவிக்கும் - டிரம்ப் ஆலோசகர்

1 mins read
5ad76857-ac7b-4484-bddd-a0b9acb84122
-

அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டோனல்ட் டிரம்ப் பாகிஸ்தானைப் பயங்கரவாத நாடாக அறிவிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் டிரம்புக்கும் இடையி லான தோழமை வளரும் என்றும் அதன் மூலம் அமெரிக்க- இந்திய உறவு புதிய அத்தியாயத்தைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக டிரம்ப்பின் ஆலோசகர்களில் ஒருவரும் பிரபல வர்த்தகருமான சலாப் குமார் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்புக்கும் மோடிக்கும் இடையில் பிரமாதமான ஒற்றுமை இருப்பதாகக் குறிப்பிடும் திரு குமார், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையை மோடி அறிவித்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்கா வின் 45வது அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட தாக 'இக்கனாமிக் டைம்ஸ்' செய்தித்தாளிடம் அவர் கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் உரி என்னும் இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கர வாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. இத்தாக்கு தலுக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் அதேவேளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

ராணுவப் பயிற்சியைப் பார்வையிடும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் (வலது). படம்: ஏஎஃப்பி