பிரதமர் லீ: சமுதாய விரிசலை தவிர்க்க வேண்டும்

பிரதமர் லீ: சமுதாய விரிசலை தவிர்க்க வேண்டும்

1 mins read
947d559a-57d7-45bc-8032-fd54edfd5b3d
-

சிங்கப்பூர் மக்களிடையே ஓர் அடையாள உணர்வையும் ஒற் றுமை உணர்வையும் வளர்ப்பதன் மூலம் அண்மைய அமெரிக்க அதிபர் தேர்தல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பொது வாக்கெடுப்பு ஆகியவற்றில் தெரிந்த ஆழமான சமுதாய விரிசலை சிங்கப்பூரில் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். "இதற்கு மாய வழிமுறை ஏதுமில்லை.

மக்களுக்காக செயல்படக்கூடிய கொள்கை களை அரசாங்கம் நடைமுறைப் படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார். பெரு நாட்டில் நடந்த ஆசிய பசிபிக் வட்டார நாடுகளின் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டின் நிறைவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்காவில் நகரங்களி லும் கரையோரப் பகுதிகளிலும் ஜனநாயகக் கட்சியினர் அதிக அளவில் உள்ளனர். மத்திய மேற்கு, மையக் குடியிருப்பு பகுதிகளில் குடியரசுக் கட்சியி னர் நிறைந்துள்ளனர்.