ஒற்றுமையைப் பறைசாற்றிய குடமுழுக்கு

1 mins read
6eceeb12-638e-49e5-baa0-20bcf69773ff
-
multi-img1 of 2

கூட்ட நெரிசலில் தவிக்காமல் ஆறஅமர இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்குச் சக்கர நாற்காலி பயன்படுத்தும் தம்மைப் போன்றோ ருக்கு ஆலயத்தின் புது வசதிகள் பெரிதளவில் கைகொடுக்கும் என்றார் 85 வயது திரு துரைசாமி பொன்னுசாமி. புதிதாக அமைக்கப் பட்ட சறுக்கு மேடையின் மூலம் இனி ஆலயத்திற்குள் எளிதாகச் செல்ல முடியும் என்றார் அவர். பொத்தோங் பாசிர் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தின் தோற்றம் மாறினாலும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதே அக்கறையுடன் அது செயல்படுகிறது என்று அவர் கூறினார். மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் குடமுழுக்கு நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட அவருக்கு ஆலயத்தின் புதிய அம்சங்கள் திருப்தியளித்தன. குடமுழுக்கில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், குடமுழுக்கைக் காண வந்த பக் தர்களையும் தொண்டூழியர்களை யும் நேரில் சந்தித்து அளவளா வினார். இந்நிகழ்வு சமய, இன நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

$2.7 மி. செலவில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தின் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியர்கள்.

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், திமத்தி டேவிட்