நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை வாயிலில் கூடிய அதிமுகவினரில் சிலர் அங்கேயே இரவுப் பொழுதைக் கழித்தனர். போலிசார் அமைத்திருந்த தடுப்பரண்களுக்கு அப்பால் நின்றபடி அதிமுக மகளிரணியினர் கண்ணீரும் கம்பலையுமாக காட்சி அளித்தனர். சிலர், "தெய்வமே எங்கள் முதல்வரைக் காப்பாற்று" என்று இரு கரம் கூப்பி கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டதைக் காண முடிந்தது. படம்: சதீஷ்
ஜெயாவுக்காக கலங்கிய அதிமுக தொண்டர்கள்
1 mins read
-

