அச்சே நிலநடுக்கத்தில் குறைந்தது 97 பேர் பலி

அச்சே நிலநடுக்கத்தில் குறைந்தது 97 பேர் பலி

1 mins read
1b09497a-8a63-44d9-8755-0d6651deba04
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா மாநிலத்தில் உள்ள அச்சே மாநிலத்தை நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது என்று ராணுவத் தலைவர் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அச்சே மாநில ராணுவத் தலைவர் டடாங் சுலைமான் கூறினார். இந்தோனீசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரியுலியுட் சிறிய நகரை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் அச்சே முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்போது பல வீடுகள், கடைகள், கட்டடங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இடிந்து விழுந்ததாக பேரிடர் நிர்வாக அமைப்பு வெளியிட்ட தகவல்கள் கூறின.

அச்சே மாநிலத்தில் நிலநடுக்கத்தின்போது இடிந்துவிழுந்த ஒரு பள்ளிவாசலுக்கு வெளியில் குடியிருப்பாளர்கள் சோகத்துடன் அமர்ந் திருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி