சிங்கப்பூரில் தரையிறங்கிய 'பறக்கும் கண் மருத்துவமனை'

சிங்கப்பூரில் தரையிறங்கிய 'பறக்கும் கண் மருத்துவமனை'

1 mins read
cc289da5-4dd3-4143-a62a-9c72ae7ef9b9
-

கடந்த ஐந்து ஆண்டுகளில் 115,000 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ள உலகின் ஒரே ஒரு 'பறக்கும் கண் மருத்துவமனையான' ஓர்பிஸ் விமானம் சிங்கப்பூரின் பாய லேபார் விமானத் தளத்தில் இந்த வாரம் தரையிறங்கியது. கண் பார்வையற்ற நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தச் சிறப்பு விமானம் சிங்கப்பூர் வந்துள்ளது. இதுவரை இந்த விமானம் 92 நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மருத்துவர்களுக்குக் கண் சிகிச்சைப் பயிற்சி வழங்கியுள்ளது. விமானத்தில் 46 பேர் அமர்ந்து பயிலக்கூடிய வகுப்பறை, அறுவை சிகிச்சைக்கூடம், நோயாளிப் பராமரிப்பு அறை முதலிய வசதிகள் உள்ளன. படம்: சாவ்பாவ்