தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி. ராம மோகன ராவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோத னையால் மாநில அமைச்சர் களும் உயர் அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரி கள் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனைகளில் 131 கோடி ரூபாய் ரொக்கமும் 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணத்தில் 34 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும். ரூபாய் நோட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் 34 கோடி ரூபாய் புது நோட்டுகள் எப்படி வந்தன என்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதி காரிகள் விசாரணை மேற் கொண்டதில் வங்கி அதிகாரி களுடன் தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்தது.
வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய வீடுகள், அலுவலகங்களைச் சுற்றிலும் உள்ளூர் போலிசுடன் மத்திய ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் காணப்பட்டது. (உள்படம்) தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். படங்கள்: தமிழக ஊடகம்

