உலகம் செல்லும் உள்ளூர் சமையல்

உலகம் செல்லும் உள்ளூர் சமையல்

1 mins read

காமன்வெல்த் கேப்பிட்டல் என்ற உள்ளூர் நிறுவனம், சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் $70 மில்லி யன் செலவில் உணவு தயாரிப்பு, சேவை ஆலையை அதிகாரபூர் வமாக நேற்று திறந்தது. உல கெங்கும் உள்ள 12 நாடுகளில் செயல்படும் 151 காப்பிக்கடைகளுக்கும் உணவகங்களுக்கும் சேவையாற்றும் வகையில் அந்த சமையல்கூடம் திறக்கப்பட்டு இருக்கிறது. பாஸ்தாமேனியா, சுவிஸ்பேக், சூப் ஸ்பூன், அடர்ஸ் போன்ற வர்த்தக அடையாள உணவு களை இந்த முதலீட்டு நிறுவனம் கையாண்டு வருகிறது. பூரோ லேனில் 300,000 சதுரஅடி பரப்பளவில் அமைந்து இருக்கும் அந்த உணவு தயா ரிப்பு நிலையத்தில் அதிநவீன சமையல் கூடம் உள்ளது என்றும் கிடங்கு வசதிகள் இருக் கின்றன என்றும் காமன்வெல்த் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.

இத்தகைய வசதி இருப்பதால் உலகளவில் தொழிலில் போட்டி யிட நல்ல அனுகூலம் ஏற்படும் என்று நிறுவனம் தெரிவித் திருக்கிறது. காமன்வெல்த் கேப் பிட்டல் நிறுவனத்தின் மிக முக் கிய ஆதாரச் சந்தையாக இருப்பது தென்கிழக்கு ஆசியா. மத்திய கிழக்கிலும் இந்த நிறு வனம் கண்வைத்து இருக்கிறது. இந்த நிறுவனம் முற்றிலும் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுகளைத் தயாரிக்கிறது. உயரழுத்த உணவு பதனீட்டுத் தொழில்நுட்பத்தை இது பயன் படுத்துவதால் தயாரிக்கப்படும் உணவு அதிக காலத்துக்குக் கெடாமல் இருக்கும். அதேநேரத் தில் உணவின் சத்தும் கெடாமல் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்தது.

நவீன உணவு தயாரிப்புத் தொழில்நுட்பத்தையும் முறைகளையும் பார்வையிடும் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்னம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்