உழவர்கள் தினத்தில் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் நிரப்ப பெருங்கூட்டம்

உழவர்கள் தினத்தில் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் நிரப்ப பெருங்கூட்டம்

1 mins read
ed0cd7a6-a9b7-47c4-9a2d-08764e11a0ed
-

புத்தாண்டில் செல்வச் செழிப்பை எதிர்பார்த்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளிலும் பணம் நிரப்பும் ஏடிஎம் இயந்திரங்களுக்கு முன்பும் மக்கள் பெருந்திரளாக நேற்று வரிசை பிடித்து நின்றனர். 'லி சுன்' என்று அழைக்கப் படும் இந்தச் சிறப்பு நாளுக்கு உழவர்கள் தினம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். இந்த சிறப்புக் காலம் இன்று தொடங்கி இம்மாதம் 18ஆம் தேதி வரை நீடிக்கும்.

'லி சுன்' நாட்களில் பணம் நிரப்புவதால் அந்தச் செல்வம் மேலும் பெருகுவதுடன் அதிர்ஷ்ட மும் வந்து சேரும் என்பது சீனர் களின் பொதுவான நம்பிக்கை. தெம்பனிஸ் செண்ட்ரல் பிஓஎஸ்பி வங்கிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழு நேற்றுக் காலை 8 மணிக்குச் சென்றபோது அங்கு நீண்ட வரிசையில் மக்கள் வங்கி திறக்கப்படுவதற்குக் காத்தி ருந்தனர்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தெம்பனிஸ் செண்ட்ரல் பிஓஎஸ்பி வங்கி திறக் கப்படும்போது, ஏராளமான வாடிக்கை யாளர்கள் வரிசையில் நின்றிருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்