சிங்கப்பூர்-இலங்கை இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு இவ்வாண்டில் கையெழுத்தாகும் என நம்புவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு அதிகார பூர்வ பயணமாகச் சென்றிருந்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் நாடு திரும்பிய போது வழியில் சிங்கப்பூரில் இறங் கினார். திரு ரணிலும் அவருடைய மனைவியும் நேற்று முன்தினம் இரவு தம்முடன் ஒன்றாக உணவு உண்டதாக பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே (இடது), அவருடைய துணைவியார் மைத்ரி (வலமிருந்து 2வது) ஆகியோருக்கு பிரதமர் லீ சியன் லூங்கும் (வலது) அவருடைய துணைவியார் ஹோ சிங்கும் (இடமிருந்து 2வது) நேற்று முன்தினம் இரவு விருந்தளித்துச் சிறப்பித்தனர். படம்: பிரதமர் ஃபேஸ்புக் பக்கம்
விவரம்: epaper.tamilmurasu.com.sg

