மரணத்தையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்திய விபத்து

மரணத்தையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்திய விபத்து

1 mins read
6b446315-1556-4a8b-b128-a5efa0068a5e
-

தீவு விரைவுச்சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். ஆடம் மேம்பாலச் சாலை அருகே துவாஸ் நோக்கிய வழியில் லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது. காலை 6.19 மணிக்கு விபத்து நிகழ்ந்த தாகவும் கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததற்காக 54 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

ஷாஹ்ரே சுகைமி, 24, எனப் படும் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத் திலேயே மாண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவ்விபத்து காரணமாக விரைவுச்சாலையின் இரு வழித்தடங்கள் மூடப்பட்டன. அதனால் காலை 8.30 மணி யளவில் ஜாலான் யூனோஸ் வரையில் போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டதாக நிலப்போக்கு வரத்து ஆணையத்தின் டுவிட்டர் செய்தி தெரிவித்தது. காலை 9 மணி வரையில் போக்குவரத்து நிலைகுத்தி இருந்தது.

மரணமடைந்தவரின் மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் மீட்டனர். படம்: வான் பாவ்

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்