வியட்னாமுடன் ஆறு ஒத்துழைப்பு உடன்பாடுகள்

வியட்னாமுடன் ஆறு ஒத்துழைப்பு உடன்பாடுகள்

1 mins read
8d2787d8-f282-40ec-be5a-f56c90222cb2
-

சிங்கப்பூரும் வியட்னாமும் இரு நாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நேற்று ஆறு உடன்பாடுகளில் கையெழுத்திட்டன. உத்தேசப் புத் தாக்க, தொழிலியல் பேட்டைக ளைக் கூட்டாக அமைப்பதும் உடன்பாடுகளில் உள்ளடங்கும். உடன்பாடுகளில் கையெழுத் திடும் நிகழ்ச்சியைப் பார்வையிட்ட பிரதமர் லீ சியன் லூங், இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்புக்கு இந்த உடன்பாடுகள் சான்று என்றார். வியட்னாமியப் பிரதமர் நுயன் சுவான் பியுக்கும் நிகழ்ச்சியில் உடனிருந்தார். "எங்களுக்கிடையிலான பொரு ளியல் உறவு வலுவானது. இரு திசைகளிலும் செல்லும் எங்கள் விமானங்கள் முழுமையாக நிறைந் துள்ளன. விமானப் பயணங்களை அதிகரித்தால் கூடுதல் இணைப் பும் கூடுதல் பொருளியல் வாய்ப்பு களும் கூடுதல் முதலீடுகளும் வர்த்தகமும் கிடைக்கும்," என்றார் திரு லீ. ஹனோயிலுள்ள அரசாங்க அலுவலகத்தில் வியட்னாமியப் பிரதமரைச் சந்தித்த பிறகு, இருவ ரும் கூட்டாக நடத்திய செய்தியா ளர் கூட்டத்தில் திரு லீ பேசினார்.

வியட்னாமுக்கு வருகை மேற்கொண்டி ருக்கும் பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து 2வது) நேற்று அந்நாட்டுப் பிரதமர் நுயன் சுவான் பியுக்கைச் சந்தித்தார். இடக்கோடியில் பிரதமர் லீயின் துணைவியார் ஹோ சிங்கும் பிரதமர் நுயனின் துணைவியார் ட்ரான் தி நுயட்டும் உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்