சிண்டாவுக்கு $250,000 நன்கொடை

சிண்டாவுக்கு $250,000 நன்கொடை

1 mins read
e7162faf-f84f-48c0-9952-af69446bcc49
-

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துக்கு குளோபல் இந்திய அனைத் துலகப் பள்ளி 250,000 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது. நன்கொடையை சிண்டாவின் சார்பாகத் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி யில் குளோபல் இந்திய அனைத்துலகப் பள்ளியின் இணை நிறுவனர் திரு அட்டுல் தெமுர்னிக்கரிடமிருந்து பெற்றுக் கொண்டார். சிண்டாவின் துணைப்பாட வகுப்புகள், கல்வித் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. குளோபல் இந்திய அனைத் துலகப் பள்ளி சிங்கப்பூரில் மூன்று வளாகங்களை நடத்தி வருகிறது. அவற்றில் பாலர் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.