அமெரிக்காவின் ஒஹையோ மாநி லத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை நேரத் தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட் டில் ஒருவர் மாண்டார், 14 பேர் காயமுற்றனர். சின்சின்னாட்டி நகரில் அமைந் துள்ள கேமியோ இரவு விடுதியில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பாக யாரும் பிடிபட்டதாக போலிஸ் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஏராளமானோரை அவர்கள் விசா ரித்தது தெரிய வந்தது. காயமுற்ற பலரது நிலைமை மோசமாக இருப்பதாக போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏராளமானோர் ஒன்றாகக் கூடி இருந்த கூட்டத்திற்குள் திடீ ரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் குறிப் பிட்டார். பயங்கரவாதம் தொடர்பான சம்பவமாக இதனைச் சந்தேகிப் பதற்குக் காரணம் தற்போதைக்கு இல்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட கேமியோ இரவு விடுதிக்கு வெளியே போலிஸ் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. படம்: ராய்ட்டர்ஸ்

