சமூகத்தினிடையே அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் வகையிலான வெளிநாட்டு போதனைகள் இங்கு இறக்கு மதி ஆகிவிடாதவாறு சமயத் தலைவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார். இமாம் நல்லா முகம்மது அப்துல் ஜமீலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர் தமது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப் பப்பட்டு இருக்கும் வேளையில் அமைச்சர் கிரேஸ் ஃபூ இவ்வாறு கூறி யுள்ளார். "சிங்கப்பூர் சமய சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதைதான் சமூக நல்லிணக்கத்தின் அடிப்படை.
"குறிப்பாக, வெவ்வேறு நம்பிக்கை களைக் கொண்ட சமயத் தலைவர்கள் அனைத்து நம்பிக்கையும் நிறைந்த, காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட, நல்லி ணக்க சிங்கப்பூர் சமுதாயத்தைப் பாது காக்கும் பொறுப்பு சமயத் தலைவர்களுக்கு உண்டு," என்றார் கிரேஸ் ஃபூ.
முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச் சர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவிக்கையில் இமாம் நல்லா முகம்மது தமது தவற்றையும் அவரது சொற்கள் பதற்றம், அமைதி யின்மையை ஏற்படுத்தி இருப்பதையும் உணர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

