அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: 35 பயணிகளுடன் சரிந்த பேருந்து

அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: 35 பயணிகளுடன் சரிந்த பேருந்து

1 mins read
6906e568-4474-4c71-97db-e2a3fe8fa362
-

சென்னை அண்ணாசாலை யில் நேற்று பிற்பகலில் திடீ ரென்று ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்தும் காரும் சிக்கிக் கொண்டன. அண்ணா சதுக் கத்தில் இருந்து வடபழனி நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தபோது இச் சம்பவம் நிகழ்ந்ததாக ஊடக செய்திகள் குறிப்பிட்டன. சாலையில் ஏற்பட்ட விரி சலுக்குள் பேருந்து சிறிது சிறிதாக இறங்குவதை உணர்ந்ததும் அதிலிருந்த 35 பயணிகளும் முண்டிய டித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்றும் பள்ளத்தில் சிக்கி யது. என்ன நடந்தது என்று அறியாத பதற்றத்தில் கார் ஓட்டுநர் வேகமாக இறங்கி தப்பியோடினார்.