காற்பந்துக் குழு சென்ற பேருந்து மீது வெடிகுண்டுத் தாக்குதல்

காற்பந்துக் குழு சென்ற பேருந்து மீது வெடிகுண்டுத் தாக்குதல்

1 mins read
c189afa0-7035-4f82-a9dd-d146c2774aad
-

ஜெர்மனியின் பிரபல பொருஸியா டோர்ட்மண்ட் காற்பந்துக் குழு வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டதில் பேருந்தின் பின்பக்கச் சன்னல் கண்ணாடிகள் நொறுங் கின. இதில் மார்க் பர்த்ரா, 26, என்ற ஸ்பானிய தற்காப்பு ஆட்டக் காரர் காயமடைந்தார். டோர்ட்மண்ட் வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வெளியே மூன்று முறை குண்டு வெடித்த தாகத் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் டோர்ட்மண்ட் குழுவும் பிரான்சின் மொனாக்கோ குழுவும் நேற்று முன் தினம் இரவு மோதவிருந்தன. இதற்காக, டோர்ட்மண்ட் குழு வினர் ஹோட்டலில் இருந்து பேருந்து மூலம் போட்டி நடக்க இருந்த 'சிக்னல் இடுனா பார்க்' விளையாட்டரங்கத்திற்குப் புறப் பட்டனர். பேருந்து பிரதான சாலைக்குத் திரும்பியதும் பெரும் வெடிச்சத்தம் கேட்டதாகக் கூறினார் அக்குழுவின் கோல் காப்பாளர் ரோமன் புவெர்க்கி.

குண்டுவெடிப்பில் சிக்கி சேதமடைந்த பொருஸியா டோர்ட்மண்ட் காற்பந்துக் குழுவினர் சென்ற பேருந்து. படம்: ராய்ட்டர்ஸ்