சிங்கப்பூருக்கும் போலந்துக்கும் இடைப்பட்ட உறவு மனமுவந்த தாகவும் நீடித்து நிலைத்திருப்பதா கவும் இருக்கிறது என்று அதிபர் டோனி டான் கெங் யாம் தெரி வித்து இருக்கிறார். போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு ஏழு நாள் அதிகாரத்துவ பயணம் மேற் கொண்டுள்ள அதிபர் டான், போலந்து அதிபர் டுடா அளித்த அதிகாரபூர்வ விருந்தில் உரையாற் றியபோது இவ்வாறு தெரிவித்தார். சிங்கப்பூரும் போலந்தும் 48 ஆண்டு அரசதந்திர உறவைக் கொண்டாடும் இத்தருணத்தில் இருநாட்டு உறவு அதற்கு அப் பாலும் பழமையானது என்றார் அதிபர் டான். சிங்கப்பூருக்கான முதலாவது கோட்பாட்டுத் திட்டத்தை 1971ல் உருவாக்கிய குழுவின் தலைமை வடிவமைப்பாளராக இருந்தவர் போலந்து நாட்டு கட்டடக்கலைச் சிற்பி ஓல்ஸ்வெஸ்கிதான் என்பதை இரண்டு அதிபர்களும் இரு நாட்டு உறவுக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்கள்.
போலந்து அதிபர் டுடா (வலமிருந்து 2வது), அவரின் மனைவி அகதா டுடா, சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம், (இடமிருந்து 2வது) அவரின் மனைவி மேரி (இடது) ஆகியோர் திங்கட்கிழமை வார்சாவில் அதிபர் மாளிகையில் சந்தித்தனர். படம்: ஏஎஃப்பி

